திருப்பி அடிக்கும் திரிணமூல்: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அதிரடி கைது

ஜிதேந்திர திவாரி
ஜிதேந்திர திவாரிதிருப்பி அடிக்கும் திரிணமூல்: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அதிரடி கைது

அசன்சோல் கூட்ட நெரிசல் வழக்கில் பாஜக தலைவர் ஜிதேந்திர திவாரியை மேற்கு வங்க காவல்துறை இன்று கைது செய்தது. கடந்த ஆண்டு பாஜக நடத்திய போர்வை வழங்கும் விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் பாஜக தலைவர் ஜிதேந்திர திவாரியை மேற்கு வங்க காவல்துறை இன்று கைது செய்தது. அசன்சோல் முன்னாள் மேயரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவாரி, 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

கடந்த ஆண்டு அசன்சோலில் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி நடத்திய போர்வை வழங்கும் விழாவின் போது நெரிசல் ஏற்பட்டது. நிகழ்விடத்தை விட்டு சுவேந்து அதிகாரி வெளியேறிய சில நிமிடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறை கூறிய நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறினர். இந்த நிகழ்ச்சியை ஜிதேந்திர திவாரி மற்றும் அவரது மனைவி சைதாலி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் இறந்தவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பல்வேறு வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இப்போது பதிலடியாக பாஜக தலைவர்களை மேற்கு வங்க காவல்துறை கைது செய்ய ஆரம்பித்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in