வேட்பாளரை ஓட ஓட விரட்டிய தேனீக்கள்... ஓட்டு கேட்டு சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

தேர்தல் பிரசார கூட்டத்தில் புகுந்த தேனீக்கள்
தேர்தல் பிரசார கூட்டத்தில் புகுந்த தேனீக்கள்

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தேனீக்கள் கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை கொட்டியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, எதிர்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் அவர்களை வரவேற்க பட்டாசுகள் வெடிப்பது, மாலை அணிவிப்பது, ஆரத்தி எடுப்பது போன்றவற்றில் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பி.ஆர்.எஸ் வேட்பாளர் கொங்கிடி சுனிதா பிரசாரத்தில் அசம்பாவிதம்
பி.ஆர்.எஸ் வேட்பாளர் கொங்கிடி சுனிதா பிரசாரத்தில் அசம்பாவிதம்

இதன் ஒரு பகுதியாக பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் ஆலேரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கொங்கிடி சுனிதா நேற்று தொண்டர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொண்டர்கள் பட்டாசு வெடித்த போது, அது அங்கிருந்த தேன்கூட்டில் பட்டு சிதறியது. இதனால் ஏராளமான தேனீக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை கொட்டத்துவங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் உட்பட கட்சியினர் தலைகளில் துண்டுகளை போட்டபடி அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாசு வெடித்ததில் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதால் சிதறி ஓடிய மக்கள்
பட்டாசு வெடித்ததில் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதால் சிதறி ஓடிய மக்கள்

இதையடுத்து வேட்பாளர் கொங்கிடி சுனிதா, பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த இருவர் கட்சியினர் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in