'என்னைப் போல சிங்கிளாக இருங்கள்': மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அமைச்சர் கொடுத்த ஐடியா!

'என்னைப் போல சிங்கிளாக இருங்கள்':  மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அமைச்சர் கொடுத்த ஐடியா!

உலக மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த என்னைப் போல சிங்கிளாக இருங்கள் என நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். சமீபத்தில் இணையத்தில் இவர் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 'வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்' என தெரிவித்து இருந்தார்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இன்று அவர் ட்விட்டரில் அடுத்த சர்ச்சையான கருத்தைப் பதிவிட்டுள்ளார். உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி மக்கள் தொகை பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். அல்லது என்னைப் போல் சிங்கிளாக இருங்கள். அப்போது நாம் ஒன்றாக ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே 'சிங்கிள்' இயக்கத்தில் சேருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in