பெங்களூருவில் முழுஅடைப்பு: 3 கி.மீ. செல்ல ரூ.800 கட்டணம்; பரிதவிக்கும் மக்கள்!

பெங்களூருவில் முழுஅடைப்பு: 3 கி.மீ. செல்ல ரூ.800 கட்டணம்; பரிதவிக்கும் மக்கள்!
Updated on
2 min read

மகளிருக்கு இலவச பேருந்து திட்டமான சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் நிலையில், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவை ஓடாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

தமிழ்நாட்டில் உள்ளது போல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இன்று முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள் கிழமையான இன்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

அரசு தரப்பில் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பல மக்கள் உரிய நேரத்திற்குள் அலுவலகம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ மற்றும் கார்களில் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வேதனைத் தெரிவிக்கும் மக்கள், 1 கிலோ மீட்டருக்கு 250 ரூபாய் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்பதாக கூறும் மக்கள், 3 கிலோ மீட்டருக்கு 800 ரூபாயை வரைக் கேட்பதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து பல ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

‘’தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்குள்ள தனியார் வாகன உரிமையாளர்கள் போராட்டம் நடத்தவில்லையே’’ என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், ஆதரவாக வரும் ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களை ஏன் ஓட்டுகிறாய் என கேட்டு அடிக்கிறார்கள். அரசாங்கம் இந்த பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in