பெங்களூரில் பதற்றம்... தனியார் வாகனங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!

பெங்களூரில் பதற்றம்... தனியார் வாகனங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!

பெங்களூரில் அரசின் சிவசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன சங்கங்கள் பந்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராப்பிடோ போன்ற இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகளை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு தனியார் வாகன சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் பெங்களூரில் வேலை நிறுத்த (பந்த்) போராட்டத்தில் இறங்கியுள்ளன.

பெங்களூரில் அரசு பேருந்துகள் இருந்தாலும், மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தனியார் வாகனங்களின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆட்டோக்கள், டாக்ஸிகள், விமான நிலைய டாக்ஸிகள், மேக்ஸி வண்டிகள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஸ்டேஜ் கேரேஜ்கள் ஆகியவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் பந்த் காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில் ராப்பிடோ ஆஃப் மூலமாக வாடகை இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்கிய நிலையில், ஜாலால்கிராஸ், டூமலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வாகங்களில் செல்லக் கூடிய பொதுமக்களையும், வாகன ஓட்டியையும் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் போராட்டத்தைப் பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்ட நினைத்தவர்களுக்கு சரியான பாடமாக இது இருக்கும் என நேர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in