முடிந்தால் பிஹாரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யுங்கள்: லாலு பிரசாத் யாதவுக்கு பாஜக சவால்!

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

முடிந்தால் பிஹாரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு பாஜகவின் கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதேபோன்ற தடை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் விதிக்கப்பட வேண்டும் என்ற லாலு பிரசாத யாதவின் கோரிக்கைக்கு பதிலளித்த பாஜகவின் கிரிராஜ் சிங், “நாங்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால், லாலு யாதவ் பிஎஃப்ஐ உறுப்பினர் என்று கூற முடியுமா?. பிஹாரில் அவர்களுக்கு ஆட்சி இருக்கிறது. தைரியம் இருந்தால் பிஹாரில் ஆர்எஸ்எஸ்ஸைத் தடை செய்யட்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் பிஎஃப்ஐ மற்றும் எட்டு துணை அமைப்புகளை மத்திய அரசு புதன்கிழமை தடை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், “அவர்கள் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்துள்ளார்கள். இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்எஸ்எஸ் தான் முதலில் தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

பிஎஃப்ஐ தடையை விமர்சனம் செய்த திக்விஜய் சிங்கிற்கு பதிலளித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "திக்விஜய் சிங் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா?. ஆனால் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in