ரேஷன்கடைகளில் இனி இதை செய்ய முடியாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு

ரேஷன்கடைகளில் இனி இதை செய்ய முடியாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இலவச தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதைத் தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளதால் இதனைத் தடுக்கும் விதமாக பகல் நேரங்களில் மட்டுமே பொருட்கள் இறக்கப்படும் எனவும், அப்போதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in