லஷ்கர் இ தொய்பாவின் பினாமியான டிஆர்எஃப் அமைப்புக்குத் தடை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

லஷ்கர் இ தொய்பாவின் பினாமியான டிஆர்எஃப் அமைப்புக்குத் தடை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பிஎஃப்ஐ அமைப்பைத் தொடர்ந்து டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 செப்டம்பர் மாதம் பிஎஃப்ஐ எனப்படும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ உள்பட அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை குலைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியைக் குலைக்கும் முயற்சியாக இது உள்ளது. பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவனர்கள் சிலர் சிமி அமைப்பின் தலைவர்களாக உள்ளனர். அதேபோல அவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புள்ளது. இவை இரண்டுமே தடை செய்யப்பட்ட அமைப்புகள்.

பிஎஃப்ஐ அமைப்பின் துணை அமைப்புகளான, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அனைந்திய இமாம் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ், நேஷனல் வுமன்’ஸ் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரஹப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பு என்று உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.

டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஆர்எஃப் பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் ஊடகம் மூலம் இளைஞர்களை இந்த அமைப்பு சேர்த்து வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் ஆட்சேர்ப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது" என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in