மோடியை காப்பாற்றியது பால்தாக்கரே...ஆனால் இப்போது எங்களுக்கு துரோகம் செய்கிறார்: கொதிக்கும் சிவசேனா எம்.பி

மோடியை காப்பாற்றியது பால்தாக்கரே...ஆனால் இப்போது எங்களுக்கு துரோகம் செய்கிறார்: கொதிக்கும் சிவசேனா எம்.பி

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2002 கலவரத்திற்குப் பிறகு குஜராத்தில் முதலமைச்சராக நீடிக்க நரேந்திர மோடிக்கு சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். ஆனால் தற்போது பால் தாக்கரேவுக்கு மோடி துரோகம் செய்துவிட்டார் என சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பேசிய அரவிந்த் சாவந்த், "மறைந்த தலைவர் பால் தாக்கரே மோடி மற்றும் பாஜகவுக்காக பலமுறை குரல் கொடுத்தார். 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு நெருக்கடி முற்றியதால், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மோடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தார், ஆனால் பால் தாக்கரே வாஜ்பாயை அப்படிச் செய்ய வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் பாலாசாகேப்பை அழைத்து, அத்வானி உங்களிடம் ஒரு முக்கிய பிரச்சினை பற்றி விவாதிக்க வருவார் என்று கூறியிருந்தார். அப்போது பாலாசாகேப் அத்வானிக்கு அளித்த அறிவுரை என்னவென்றால் 'மோடி போய்விட்டால் பாஜக குஜராத்தை இழக்கும்' எனக் கூறினார். பால் தாக்கரே தனது கடைசி மூச்சு வரை மோடியுடனான நட்பைக் கௌரவித்தாலும், பாலாசாகேப் உடனான நட்பை மோடி மதிக்கவில்லை. அவர் பால் தாக்கரேவுக்கு துரோகம் செய்துவிட்டார் ” என்று கூறினார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த், 2019 இல் சிவசேனா-பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததும் ராஜினாமா செய்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in