பால் பாக்கெட்டுகளில் ஆயுத பூஜை வாழ்த்து: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆவின் நிர்வாகம்!

பால் பாக்கெட்டுகளில் ஆயுத பூஜை வாழ்த்து: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆவின் நிர்வாகம்!

ஆவின் நிர்வாகம் சார்பாக விநியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் ஆயுதபூஜை  மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் தமிழகத்தில்  பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் பால் மட்டுமின்றி, குலாப் ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் பால் பாக்கெட் கவரில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்து பண்டிகைகளுக்கு ஆவின் நிறுவனம் வாழ்த்து சொல்வதில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளின் மூலம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ஆவின் இனிப்புகளை வாங்கி மகிழ்வீர்’ எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தி மூலம் தமிழக அரசு அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது போல் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in