அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்கப்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை

அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்கப்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 2020 ஆக.5-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். கோயிலின் கட்டுமானச் செலவு சுமார் 1800 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கோயிலின் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு இக்கோயில் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹால்கல் லோக் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் இக்கோயில் திறக்கப்படலாம். காசி விஷ்வநாதர் கோயில் நமது இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இதுவரை காணாத ஓர் வளர்ச்சி சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவதலங்களில் நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆன்மிகத்தலங்களின் பெருமைகளை மீட்டெடுக்கிறோம்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in