தமிழக சட்ப்பேரவைக்கு வந்த மில்டன் டிக்
தமிழக சட்ப்பேரவைக்கு வந்த மில்டன் டிக்

தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஆஸ்திரேலியா எம்.பிக்கள் குழு!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத் தலைவர் மில்டன் டிக் தலைமையில் அந்த நாட்டைச் சேர்ந்த குழுவினர் சட்டப்பேரவை நிகழ்வை பார்வையிட்டனர்.

சட்டப்பேரவை கூட்டம்
சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை இன்று பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கூடியது. காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீர்வளத்துறை சார்ந்த கேள்விக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

இந்த நிலையில் பேரவையின் நடவடிக்கையைக் காண ஆஸ்திரேலியா நாடாளுமன்றக் குழு தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை வரவேற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in