ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம், தங்கத்தை ஏலம் விடவும்: கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம், தங்கத்தை ஏலம் விடவும்: கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பொது ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா திடீரென மறைந்தார். இதையடுத்து சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்து நேற்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.

ஜெயலலிதாவின் பொருள்களை ஏலத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிமுகவினர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in