அரிவாளைக்காட்டி அதிமுக பெண் பூத் ஏஜென்ட்டுகளை பூட்டிவைத்து கள்ள ஓட்டு போட முயற்சி

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு; சாலை மறியல்
அரிவாளைக்காட்டி அதிமுக பெண் பூத் ஏஜென்ட்டுகளை பூட்டிவைத்து கள்ள ஓட்டு போட முயற்சி
மறியல் செய்வோருடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை, காசிமேட்டில் 43-வது வார்டில் அரிவாள்களோடு நுழைந்த ஒரு கும்பல் அதிமுக பெண் பூத் ஏஜென்ட்டுகளை அறையில் தள்ளி பூட்டிவைத்து கள்ள ஓட்டுப் போட முயற்சித்ததாக அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை, காசிமேடு சூரிய நாராயணன் தெருவில் தனுஷ்கோடி பள்ளியில் 43-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் உள்ளது. திமுக சார்பில் பவித்ரா, அதிமுக சார்பில் தமிழரசி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த வாக்குச்சாவடியில் காலையிலிருந்து வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்தது.

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ஆர்.கே.நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எபிநேசர் தலைமையில் வந்த கும்பல், வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அரிவாளைக் காட்டி அதிமுகவைச் சேர்ந்த பெண் பூத் ஏஜென்ட்டுகளை மிரட்டி, அவர்கள் கையில் இருந்த நோட்டு புத்தகத்தைப் பிடுங்கி எறிந்துள்ளனர்.

உடைக்கப்பட்ட கார்
உடைக்கப்பட்ட கார்

பின்னர், அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து அங்கு வந்த அதிமுக வேட்பாளர் தமிழரசி மற்றும் கட்சியினர், மநீம வேட்பாளர் உஷாராணி, பாஜக வேட்பாளர் நதியா உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர், திமுக எம்எல்ஏ எபிநேசரின் கார் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து அங்குவந்த துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.