எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்: தமிழச்சி தங்கப்பாண்டியன் அதிர்ச்சி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்: தமிழச்சி தங்கப்பாண்டியன் அதிர்ச்சி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதலுக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது என்று திமுக‌ எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளராகிய சல்மான் ருஷ்டி எழுதிய `சாத்தானின் வேதங்கள்' என்ற நூல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய தலைக்கு ஈரான் மதத் தலைவர்கள் பரிசும் அறிவித்தனர். பயங்கரவாதிகளின் மிரட்டலால் அமெரிக்காவின் வசித்து வருகிறார் சல்மான் ருஷ்டி. இந்நிலையில், நியூயார்க் நகரில் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்த சல்மான் ருஷ்டி மீது மர்மநபர் திடீரென கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதலால் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதலுக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. விரைவில் அவர் நலம்பெற வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in