காவல் நிலையத்திலும் புகுந்தனர்: திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்

அடுத்து நொறுக்கப்பட்ட  கார், டூவீலர்
அடுத்து நொறுக்கப்பட்ட கார், டூவீலர்காவல் நிலையத்திலும் புகுந்தனர்: திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்

கருப்புக்கொடி காட்டிய திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் வீடு புகுந்தும், காவல் நிலையத்தில் புகுந்தும் தாக்கியுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் பேச்சுவார்த்தை
போலீஸார் பேச்சுவார்த்தைகாவல் நிலையத்திலும் புகுந்தனர்: திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி சிவா திருச்சி மாவட்டத்திற்குள் உள்ளூர்  அரசியல் செய்வதைத் தவிர்த்து விட்டு மாநில மற்றும் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் அவரது வீடு அமைந்திருக்கும் ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் இறகுப்பந்து மைதானம் ஒன்று  புதிதாக அமைக்கப்பட்டது. அமைச்சர் நேரு திருச்சியில் இருக்கும் இந்த நேரத்தில் அவரை வைத்து  விழா நடத்துவதற்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அந்த இறகுப்பந்து மைதானம் திறப்பும் அடங்கியிருந்தது. 

இதனை கேள்விப்பட்ட திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அந்த மைதானம் திறப்பு விழாவை மட்டும்  வெளிநாட்டில் இருக்கும் திருச்சி சிவா திருச்சி திரும்பியதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இன்று காலை அந்த மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் நேரு அங்கு வந்தார்.

அடித்து நொறுக்கப்பட்ட சேர்கள்.
அடித்து நொறுக்கப்பட்ட சேர்கள்.காவல் நிலையத்திலும் புகுந்தனர்: திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா அழைக்கப்படாதது மட்டுமின்றி அழைப்பிதழ் உள்ளிட்டவற்றில் அவரின் பெயரும் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் நேரு அந்த வழியாக வந்த போது அவரது காரை மறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து மைதானம் திறப்பு விழா முடிந்ததும் நேரு அந்த வழியாக திரும்பி வந்தார். அப்போது அவரோடு வந்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட நேருவின் ஆதரவாளர்கள்,  சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். அத்துடன் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கிருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களைக் கடுமையாக தாக்கினர். இந்த தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீஸார் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டு திருச்சி சிவாவின் ஆதரவாளர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், நேருவின்  ஆதரவாளர்கள் மேலும் பலர் திரண்டு காவல் நிலையத்திற்கு உள்ளே புகுந்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்களைக் கடுமையாக தாக்கினர். அதையடுத்து திருச்சி மாநகர போலீஸார் விரைந்து வந்து காவல் நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். நேருவின் ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு திருச்சி சிவாவின் வீடு நோக்கி செல்ல முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.  இதனால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படி கோஷ்டி மோதல் ஏற்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in