தமிழக பாஜகவினர் நடத்தப்படும் தாக்குதல் குறித்து தேசிய பாஜகவால் அமைக்கப்பட்ட நால்வர் குழு தங்களது அறிக்கையை ஆளுநரிடம் அளித்தது.
அண்மையில் பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, லோக்சபா எம்.பிக்கள் சத்ய பால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு இன்று தங்களது ஆய்வுகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, ‘’ தமிழக பாஜகவினர் மீது திமுக அரசு திட்டமிட்டு வழக்குகளை தொடுத்து வருகிறது. பனையூர் விவகாரத்தில் இஸ்லாமியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள் மீது எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்படவில்லை.
தமிழக பாஜகவினர் மீது மட்டும் கண்மூடித்தனமான தாக்குதலை காவல்துறை திட்டமிட்டு நடத்தியுள்ளது. அண்ணாமலையின் நடைப்பயணம் திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை இவர்கள் திட்டமிட்டு செய்துள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜகவினரிடம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த அறிக்கையை நால்வர் குழு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இன்று வழங்கினர். இதனைத் தொடர்ந்து அந்த குழு தேசிய தலைமையிடம் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!