ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏ மீது தாக்குதல், சட்டை கிழிப்பு: கோரிக்கையை நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம்

ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏ மீது தாக்குதல், சட்டை கிழிப்பு: கோரிக்கையை நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம்

காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏவை பொதுமக்கள் அடித்து உதைத்ததோடு, அவரது சட்டையை கிழித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்திலுள்ளது ஹள்ளிமனகுண்டூர் கிராமம் உள்ளது. வனத்தையொட்டிய இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக அந்த தொகுதி எம்எல்ஏ குமாரசாமி சென்றிருந்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம், வனவிலங்குகள் அடிக்கடி எங்கள் ஊருக்கு வருவதை தடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் என்று ஆவேசத்துடன் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், எம்எல்ஏ குமாரசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து போனார். இந்த தாக்குதலில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்து எம்எல்ஏவை மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். இதனிடையே, எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏவை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி சட்டை கிழித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in