அமமுக நிர்வாகி மீது தாக்குதல்: ஈபிஎஸ் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸில் புகார்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிஅமமுக நிர்வாகி மீது தாக்குதல்: ஈபிஎஸ் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸில் புகார்

மதுரை விமான நிலையத்தில் தனது 1.25 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது அமமுக நிர்வாகி போலீஸில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் இன்று நடைபெறும் அதிமுக. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தார். அவர் விமான நிலைய வளாகத்தில் வந்த போது அவருடன் பயணம் செய்த அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு செயலாளரான ராஜேஸ்வரன், தனது செல்போனில் எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்வதாக ஃபேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார்.

அப்போது திடீரென எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், ராஜேஸ்வரனின் செல்போனைப் பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த அதிமுகவினர் சிலர் ராஜேஸ்வரனின் சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் தனது ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக்கொண்டதாகவும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், காயம் ஏற்படும் வகையில் மதுரை விமான நிலையத்தில் தன்னைத் தாக்கியதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது தனி பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in