ஈரோடு கிழக்கு வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியீடு: நம்பர் ஒன் யார் தெரியுமா?

ஈரோடு கிழக்கு வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு வேட்பாளர்கள்ஈரோடு கிழக்கு வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியீடு: நம்பர் ஒன் யார் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மொத்த சொத்து மதிப்பு 3.50 கோடி. அவரது மனைவியின் சொத்து மதிப்பு 7.16 கோடி. குடும்ப சொத்து மதிப்பு 7.16 கோடி. இளங்கோவனின் கடன் மதிப்பு 1.29 கோடி. இளங்கோவனின் மனைவி பெயரில் உள்ள கடன் மதிப்பு 1.71 கோடி. குடும்ப கடன் 47.55 லட்சம்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் சொத்து மதிப்பு 2.27 கோடி. அவரது மனைவியின் சொத்து மதிப்பு 1.78 கோடி. கடன் மதிப்பு ஏதுமில்லை.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தின் சொத்து மதிப்பு 14.74 லட்சம். வங்கி கடன் 2 லட்சம்.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவின் சொத்து மதிப்பு 9.7 லட்சம். அவரது கணவர் சொத்து மதிப்பு 2.69 லட்சம். மேனகாவின் கடன் மதிப்பு 4.8 லட்சம். அவரது கணவரின் கடன் மதிப்பு 3.53 லட்சம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in