சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

குஜராத் மற்றும இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. குஜராத்தில் பாஜக 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையிலும், பாஜக 26 தொகுதிகளிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in