திருச்சூரில் போட்டியிட ஆசை: அமித்ஷாவிடம் சீட் கேட்ட நடிகர்

 உள்துறை அமைச்சர் அமித்               ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷாதிருச்சூரில் போட்டியிட ஆசை: அமித் ஷாவிடம் சீட் கேட்ட நடிகர்

தனக்கு திருச்சூரில் போட்டியிட விருப்பம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபி தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

மோடியுடன் சுரேஷ் கோபி
மோடியுடன் சுரேஷ் கோபிதிருச்சூரில் போட்டியிட ஆசை: அமித் ஷாவிடம் சீட் கேட்ட நடிகர்

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசிய மலையாள நடிகரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுரேஷ்கோபி, “திருச்சூர் தொகுதியை வரும் பாராளுமன்றத் தேர்தலில் எனக்குத் தாருங்கள். நான் இதை இதயப்பூர்வமாகக் கேட்கிறேன். எனக்கு நீங்கள் திருச்சூரைத் தந்தால் நான் ஜெயித்துக் காட்டுவேன். திருச்சூர் இல்லை என்றால் கண்ணூரில் போட்டியிடவும் தயார். திருச்சூர் அல்லது கண்ணூர் இரண்டில் எது தந்தாலும் போட்டியிடத் தயார் ”என பேசினார்.

கண்ணூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகும். அங்கு தான் முதல்வர் பினராயி விஜயனின் பினராயி கிராமம் உள்ளது. அதனால் அங்குப் போட்டியிட்டாலே பாஜக மட்டத்தில் மிகவும் நல்லபெயர் எடுக்கமுடியும் என்பதும் சுரேஷ்கோபியின் வியூகம். ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் சுரேஷ்கோபி திருச்சூரிலேயே தங்கி இருந்து கட்சிப் பணி செய்தும் வருகிறார். தமிழில் 'தீனா' உள்பட சில படங்களில் நடித்து இருக்கும் சுரேஷ்கோபிக்கு கேரளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in