விவாகரத்து கேட்டு தொல்லை தருகிறார்; வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த ஜெ.தீபா: பதறிப்போன மாதவன்

விவாகரத்து கேட்டு தொல்லை தருகிறார்; வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த ஜெ.தீபா: பதறிப்போன மாதவன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது கணவர் மாதவன் விவகாரத்து கேட்டுத் தொல்லை செய்வதாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா. இவரது கணவர் மாதவன். தன்னை விவாகரத்து கேட்டு மாதவன் தொல்லை செய்வதாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ் தீபா வைத்துள்ளார். அந்த ஸ்டேடஸை சிறிது நேரத்திலேயே நீக்கியும் உள்ளார்.

தீபா, மாதவன் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத காலமாக அவர்கள் இவருக்கும் பிரச்சினை இருப்பதாகவும், மாதவன் விவகாரத்து கேட்டு தொல்லை தருவதாகவும் தீபா புகார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தீபா வைத்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ் அதை உறுதிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த செய்தியை மாதவன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன்.தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸடே்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்.அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in