செந்தில் பாலாஜி - அசோக்குமார்
செந்தில் பாலாஜி - அசோக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி தப்பியோட்டம்! அமலாக்கத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார், அமைச்சரின் உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனையடுத்து அவரது தம்பி அசோக்குமாரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத் துறை 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் நெஞ்சு வலி என சாக்கு போக்கு சொல்லி ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து அவருடைய மனைவி பெயரில் கரூரில் சொகுசு வீடு கட்டப்பட்டு வருவதால் அதில் உள்ள நில மோசடி குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அசோக்குமாரை நேற்று கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல் வெளியானது. இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறைக்கு விளக்கமளிக்க பயந்து அவர் வெளி நாட்டிற்கு தப்பி சென்றிருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in