விபாசனா தியானத்துக்கு செல்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் இன்று முதல், விபாசனா தியானத்திற்குச் செல்வதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மக்கள் அனைவரும் ஒரு முறை இந்த தியானத்தை செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

விபாசனா என்பது பழங்கால இந்திய தியான நுட்பமாகும். இந்த தியானத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் மன நலனை மீட்டெடுக்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பேச்சு மற்றும் சைகைகள் மூலமாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக விலகி இருப்பார்கள்.

அர்விந்த் கேஜ்ரிவால் விபாசனா தியானத்தை இந்த முறை எங்கு பயிற்சி செய்யவுள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. 2016-ம் ஆண்டில், அவர் 10 நாட்கள் விபாசனா பயிற்சி செய்வதற்காக நாக்பூருக்குச் சென்றிருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, அவர் மகாராஷ்டிராவில் உள்ள இகத்புரியில் பயிற்சி செய்தார், பின்னர் இமாசல பிரதேசத்தின் தரம்கோட்டில் இந்த தியானத்துக்காக சென்றார்.

இது குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இன்று, நான் விபாசனா தியானத்திற்குச் செல்கிறேன், நான் வருடத்திற்கு ஒரு முறை இந்த தியானம் செய்ய முயற்சிக்கிறேன். நான் ஜனவரி 1-ம் தேதி திரும்பி வருவேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இந்த அறிவை கற்பித்தார். நீங்கள் விபாசனா பயிற்சி செய்தீர்களா? இல்லை என்றால், நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை ஒரு முறை செய்யுங்கள். இது நிறைய உடல், மன மற்றும் ஆன்மீக நன்மைகளைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in