கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

ஸ்டாலின் - கேஜ்ரிவால்
ஸ்டாலின் - கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியை பலப்படுத்தும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மதுபான கொள்கை வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று தற்காலிக ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வரை தற்காலிக ஜாமீன் வழங்கியது. மேலும் வரும் ஜூன் 2ம் தேதி கேஜ்ரிவால் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in