சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் அர்விந்த் கேஜ்ரிவால்: பாஜகவுக்கு செக்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

இன்று டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 58 எம்எல்ஏக்கள் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியான பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' திட்டம் தோல்வியடைந்ததாகக் கூறி, சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க கேஜ்ரிவால் ஆகஸ்ட் 29ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்தார்.

நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்ற பின்னர் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கூட பாஜகவால் விலைக்கு வாங்க முடியவில்லை. எங்களிடம் 62 எம்எல்ஏக்கள் உள்ளனர், இருவர் வெளியூரில் உள்ளனர், ஒருவர் சிறையில் உள்ளார். மற்றொரு உறுப்பினர் சபாநாயகர். மற்ற 58 பேரும் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.

கலால் கொள்கை தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்திய பின்னர் அரசியல் சூழல் பரபரப்படைந்தது. இதனைத் தொடர்ந்து, 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக குறிவைத்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in