அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அக்னிப்பரீட்சை: டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா

பாஜக தங்கள் அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் இன்று டெல்லி சட்டசபையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று நடைபெறும் டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தொடர் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணிக்கு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும், ஆம் ஆத்மி அரசு தனது கட்சி எம்எல்ஏக்கள் யாரும் விலகவில்லை என்பதை நிரூபிக்க வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அதிகாரிகள் பலரின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 20 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அர்விந்த் கேஜ்ரிவால் பகீர் புகாரை முன்வைத்தார். மேலும், “பாஜகவின் ஆபரேஷன் தாமரை டெல்லி” என்பது ஆபரேஷன் கிச்சட் ஆகிவிட்டது என்பதை டெல்லி மக்கள் முன் நிரூபிக்கும் வகையில் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வர விரும்புகிறேன்” என்று கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in