ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை : முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை ஆலோசனை

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை : முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை ஆலோசனை

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

சென்ன தலைமை செயலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள இரண்டாவது பசுமை விமான நிலைய விவகாரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in