எதிர்க்கட்சிகள் வேலையற்றவர்களா? - பாஜகவின் கருத்தால் கொதிக்கும் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் வேலையற்றவர்கள் என்று பாஜக கூறிய கருத்துக்கு , பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் இன்று மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, லக்னோ சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் இருந்து சட்டமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் இப்பேரணியை தொடக்கத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பேசிய உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, சமாஜ்வாதி கட்சிக்கு தற்போது வேலை இல்லாமல் உள்ளது, அதனால் இதுபோல செய்கிறார்கள் என தெரிவித்தது சர்ச்சையானது.

இது தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர், “ இங்கு எதிர்க்கட்சிகள் வேலையில்லாமல் இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது அவர்களின் திமிர்த்தனமான சிந்தனையையும், பொறுப்பற்ற மனப்பான்மையையும் அம்பலப்படுத்துகிறது. அரசின் சிந்தனையானது பொதுநலனில் நேர்மை மற்றும் விசுவாசத்தை நிரூபிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இது எதிர்க்கட்சிகளுக்கு எதிரான தீங்கிழைக்கும் அணுகுமுறை. மாநிலத்தின் சரியான வளர்ச்சி மற்றும் பொது நலனில் உ.பி. அரசுக்கு அக்கறையும் தீவிரமும் இருந்தால், இதுபோன்ற கருத்து வந்திருக்காது” என்று கூறினார்.

மேலும், “ மாநிலத்தில் நிலவும் மிகப்பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், குண்டும் குழியுமான சாலைகள், மோசமான கல்வி, சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றி பாஜக பேச வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in