நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்... ஜாமீன் கேட்டு சர்ச்சை பேச்சு மணியன் நீதிமன்றத்தில் மனு!

ஆர்.வி.பி.எஸ் மணியன்
ஆர்.வி.பி.எஸ் மணியன்

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில், இழிவாகவும், அவதூறாகவும், ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியிருந்தார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்ய வேண்டும் என பல பலரும் ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணியனை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதன் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்திற்கு வந்த ஆர்.பி.வி.எஸ் மணியன்
நீதிமன்றத்திற்கு வந்த ஆர்.பி.வி.எஸ் மணியன்

இந்த நிலையில் மணியன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணியனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, மணியன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம் காவல்துறை சார்பில் மணியனின் ஜாமீன் மனு மீது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வரும் 25-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in