நாளை மறுநாள் கேஜ்ரிவால் கைது? - முதல்வர் ஸ்டாலினுக்கும் குறி... டெல்லி அமைச்சர் பகீர்!

கேஜ்ரிவால் ஸ்டாலின்
கேஜ்ரிவால் ஸ்டாலின்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நவம்பர் 2-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆளும் அரசு கடைபிடித்த மதுபான கொள்கையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் மொத்தம் 15 பேர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போதுவரை மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், நவம்பர் 2-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறையின் இந்த சம்மன் டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இது தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பொய் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறது அமலாக்கத்துறை. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது பாஜக. இதனால்தான் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. தேர்தல்களில் அர்விந்த் கேஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாத பாஜக இப்படியான குறுக்கு வழிகளை கையில் எடுக்கிறது.

எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி நவம்பர் 2-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு கேஜ்ரிவால் ஆஜராகும் போது அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் கேஜ்ரிவாலை கைது செய்ய முடியாது. ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதாலேயே கேஜ்ரிவாலை கைது செய்கிறது” என்றார்

கேஜ்ரிவால் ஸ்டாலின்
கேஜ்ரிவால் ஸ்டாலின்

மேலும், “அர்விந்த் கேஜ்ரிவாலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் குறி வைத்திருக்கலாம். அதன் பின்னர் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கைது செய்யலாம். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ஆர்ஜேடி கூட்டணியை உடைக்க முடியாத விரக்தியில் இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொள்ளக் கூடும். அதன்பின்னர் கேரளா முதல்வர் பினராயி விஜயன், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிவைக்கப்படலாம்” இவ்வாறு அமைச்சர் அதிஷி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in