மணீஷ் சிசோடியா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்: சத்யேந்தர் ஜெயினும் பதவி விலகினார்

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாமணீஷ் சிசோடியா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்: சத்யேந்தர் ஜெயினும் பதவி விலகினார்

இருவேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் டெல்லி அமைச்சரவையில் இருந்து இன்று ராஜினாமா செய்தனர்.

டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயினின் ராஜினாமாவை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த ராஜினாமாக்கள் எந்த வகையிலும் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, இது ஒரு "நிர்வாக நடவடிக்கை" என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியது. அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள டெல்லி பட்ஜெட் வரை புதிய அமைச்சர்கள் யாரும் அமைச்சரவையில் சேர மாட்டார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் துறைகள் அமைச்சர்கள் கைலாஷ் கஹ்லோட் மற்றும் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை இன்று ஏற்கமறுத்த உச்சநீதிமன்றம், முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தியது.

பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 10 மாதங்களாக சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயின் வசமிருந்த சுகாதாரத் துறை உட்பட 18 அமைச்சகங்களை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவனித்து வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in