8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏவுக்கு கைது வாரண்ட்

8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏவுக்கு கைது வாரண்ட்

எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உ.பி பாஜக எம்எல்ஏ ராம்துலருக்கு எதிராக சோன்பத்ரா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. துத்தி தொகுதி எம்எல்ஏ சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேச மாநிலம் துத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ராம்துலர், பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கூடுதல் அமர்வு நீதிபதி ராகுல் மிஸ்ரா நேற்று அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தார்.

சோன்பத்ரா மாவட்டம் மையர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 2014- ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி, அப்போதைய கிராமத் தலைவியின் கணவர் ராம்துலர், தனது சகோதரியான 8 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் செய்தார். தீவிர விசாரணைக்கு பின் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் இந்த 8 வருட காலகட்டத்தில் ராம்துலர் ஆளும் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு துத்தி தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் மாறியுள்ளார்.

இந்த சூழலில்தான் ராம்துலருக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. உடல்நலக் காரணங்களுக்காக ஆஜராகவில்லை என்று ராம்துலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எம்எல்ஏவை கைது செய்து ஜனவரி 23ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் ராம்துலரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளும் பாஜக எம்எல்ஏவுக்கே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in