ஆளும் கட்சி எம்எல்ஏ கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ரா
ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ரா

ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 41 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர். சோதனையில், 16.57 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக சிபிஐ குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி,அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் வைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்காக நான்கு சம்மன்களுக்கும் ஆஜராக காரணத்தால் கஜ்ஜன் மஜ்ரா கைது செய்யபட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கள்கிழமை மாலை அவர் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலையில் மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள அமர்கரில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஜலந்தர் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு கஜ்ஜன் மஜ்ராவைக் கைது செய்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in