கைதான எச்.ராஜா... ட்விட்டரில் கொசுவர்த்தி சுருள் படம் போட்டு கடுப்பேற்றிய உதயநிதி!

கைதான எச்.ராஜா... ட்விட்டரில் கொசுவர்த்தி சுருள் படம் போட்டு கடுப்பேற்றிய உதயநிதி!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கிண்டல் செய்யும் விதமாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருச்சி, திருவினைக்காவல் பகுதியில் எச்.ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது ‘’சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்து மக்களை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு ஒழிப்போம் என கூறும் கிரிமினல் உதயநிதியை ஏன் கைது செய்யவில்லை’’ என கேள்வி எழுப்பினார்.

அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் கொசுவை ஒழிக்கும் கொசுவர்த்தி சுருளை பதிவேற்றியுள்ளார். இதற்கு உதய நிதியின் நண்பரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், ‘’நீ விளையாடு நண்பா’’ என பதிவிட்டுள்ளார். இது பாஜகவினர் மத்தியில் மேலும் கடுப்பேற்றியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in