`திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்யுங்கள்'- டி.ஜி.பி-யிடம் பா.ஜ.க புகார்

`திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்யுங்கள்'- டி.ஜி.பி-யிடம் பா.ஜ.க புகார்

இந்து மதத்தினரை இழிவாகப் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது பா.ஜ.க சார்பில் டி.ஜி.பி-யிடம் புகார்*

தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு நாகராஜன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா "நீ இந்துவாக இருந்தால் சூத்திரன், விபச்சாரியின் மகன்" என்றும் இந்துவாக இருப்பவர்கள் பஞ்சமன், தீண்டத்தாகதவர்கள் எனவும் கொச்சையாக பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் 85% இந்துக்கள் வாழக்கூடிய நிலையில், இந்து சமூக மக்களை இவ்வாறு இழிவாக பேசியது இந்துக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இந்து மதத்தினரை இழிவாகப் பேசி, மதக்கலவரத்தை தூண்டுவதுபோல் தொடர்ந்து பேசி வரும் ஆ.ராசா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in