ஐயா 200 ஓட்டைக் காணோம்... தஞ்சையில் வாக்காளர்கள் போராட்டம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறியதால் மக்கள் வாக்குவாதம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறியதால் மக்கள் வாக்குவாதம்

தஞ்சை பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு ஓட்டு இல்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தொகுதியிலும் தீவிர வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் அண்ணா நகர் வாக்குச்சாவடி
தஞ்சாவூர் அண்ணா நகர் வாக்குச்சாவடி

இன்று காலையில், தஞ்சை பர்மா நகர் 8-ம் தெருவில் அங்கன்வாடி பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பாகம் எண் 143, 145 ஆகிய இரண்டிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கச் சென்று உள்ளார். அப்போது, ”உங்களுக்கு ஓட்டு இல்லை, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை” என அதிகாரிகள் கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் இந்த வாக்குசாவடியில் மட்டும் 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்தும் தங்களது பெயர் பட்டியலில் இல்லை என வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் புலம்பினர். அதேசமயம், எங்கள் பெயர்கள் எப்படி பட்டியலில் இல்லாமல் போகும்... பெயர்களை நீக்கியது யார் என்று கேட்டு வாக்களிக்க முடியாதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in