திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... ஆவேசப்படும் அர்ஜுன் சம்பத்!

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டில் ஆளுநருக்கே  பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் திமுக அரசை டிஸ்மிஸ்  செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தீபாவளி பண்டிகைக்கு மிக அதிகமாக இலக்கு வைத்து ரூ.300 முதல் 400 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்கிறார்கள். ஆனால் அன்று மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் தேசிய தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த வரலாற்றை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளுநர் கூறியது சரியானதுதான். 

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலஸ்தீன ஆதரவு என்ற பெயரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆளுநர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நவ.1-ல் சென்னையில் தமிழ்நாடு தினம் இந்து மக்கள் கட்சி சார்பில் கொண்டாடப்படுகிறது. அன்று திராவிட கருத்தியல் ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in