திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு

நாகர்கோவிலில் அர்ஜூன் சம்பத் உருவபொம்மையை எரித்த வி.சி.கவினர்
நாகர்கோவிலில் அர்ஜூன் சம்பத் உருவபொம்மையை எரித்த வி.சி.கவினர்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மிகுந்த பேருந்து நிலையத்தில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அர்ஜூன் சம்பத், அடியார்களை அரசும், அரசியல் கட்சிகளும் அடியாட்களாக மாற்றிவிடக் கூடாது என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “இந்து தெய்வங்களை தினமும் ஆபாசமாக பேசக் கூடிய திருமாவளவன் காசு வாங்கிவிட்டு, இஸ்லாமியர்கள் போடும் பிரியாணிக்காக செயல்படுகிறார். திருமாவளவன் போல் செயல்பட்டால் வெறுப்புப் பிரச்சாரம் தான் வளரும். திருமாவால் ஏராளமான இளைஞர்கள் சீரழிந்து ஜெயிலில் உள்ளனர். 5,000 பேருக்கும் அதிகமான பட்டியல் இன இளைஞர்கள் அவரால் தூண்டப்பட்டு சிறையில் உள்ளனர். திருமாவளவன் மதமாற்ற ஏஜென்ட்’ எனவும் கொதித்தார்.

இது தமிழகம் முழுவதிலும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உஷ்ணப்படுத்தியது. இந்நிலையில் நாககோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகி திருமாவேந்தன் தலைமையில் திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அர்ஜூன் சம்பத்தின் உருவபொம்மையை எரித்தனர். தொடர்ந்து அர்ஜூன் சம்பத், மதரீதியாக மக்களை பிளவுப்படுத்த முயல்வதாகவும் குற்றம்சாட்டினர். நாகர்கோவில் பேருந்து நிலையத்திலேயே அர்ஜுன் சம்பத் உருவபொம்மை எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in