அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!

அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியுடன் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.

காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜோதிமணி எம்.பி ஏற்பாட்டில் ராகுலை சந்தித்தோம். கடந்த தேர்தலின்போதே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார். அதைத்தான் இப்போதும் நினைவூட்டினோம். நிச்சயம் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்லும். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றேன். என் கருத்தையும் காது கொடுத்துக் கேட்டார். நேரு இந்திய விடுதலைக்காக போராடினார். அவர் வழியில் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து நாட்டைக் காக்கப் போராடுகிறார்.

யாத்திரையின் போது ராகுலுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் இந்தக் கோரிக்கையை சொன்னேன். மாநிலத்தின் குரல்களை ஏற்காத அரசாக மத்திய அரசு இருக்கிறது என்று சொன்னேன். அவர் காங்கிரஸ்க்கு அந்த பாலிசி இல்லை. அனைவரது குரலும் மதிக்கப்படும் என்றார். தொடர்ந்து தமிழகம் மட்டும் நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறது என்பதையும் முழுதகவலாகக் கேட்டுத் தெரிந்துகொண்டர்” இவ்வாறு அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in