பேச்சை நிறுத்த சொன்ன நிர்வாகி: மறுத்த முன்னாள் பெண் அமைச்சர்: அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்

பேச்சை நிறுத்த சொன்ன நிர்வாகி: மறுத்த முன்னாள் பெண் அமைச்சர்: அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் திமுக இலக்கிய அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி பேசும்போது, பேச்சை நிறுத்த சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை தி.நகரில் திமுக இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ராஜகண்ணப்பன் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி மாநில செயலாளருமான இந்திரகுமாரி மேடையில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, பேச்சை முடித்துக்கொள்ளுங்கள் எனக் அக்கட்சியின் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நந்தனம் நம்பிராஜன் கூறினார். அதற்கு, இந்திரகுமாரி தான் பேச்சை நிறுத்த மாட்டேன் என்றும், இறந்தாலும் பரவாயில்லை பேசிவிட்டுதான் செல்வேன் எனதெரிவித்தார். அமைச்சர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதம் நடைபெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in