
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுக்கிறது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக அமைச்சர்கள் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை, முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்னர். இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இன்னும் தங்கள் நிலைப்பாடை அறிவிக்கவில்லை.
இதனை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், "தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய், ஆதரவைத் தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதங்களில் அதிகமாக பரவி வருகிறது.