இடைத்தேர்தலில் என்னோடு போட்டியிடத் தயாரா? - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

இடைத்தேர்தலில் என்னோடு போட்டியிடத் தயாரா? - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை என்னோடு போட்டியிட்டு ஜெயிக்கத் தயாரா என ஆவேசத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கேட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து அண்மையில் காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருந்தார். நடிகை, நடன இயக்குனர் என திரைத்துறையில் இயங்கிவரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் கூறிவருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக காய்த்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். அப்போது நான் உங்களை எதிர்த்து நிற்பேன். இதை சவாலாகவே சொல்கிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். நான் தமிழ்நாட்டின் மகள். நீ தமிழகத்தின் மகன். தமிழ்நாடா? தமிழகமா? எனப் பார்த்துவிடலாம்”எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் இருந்தவரை ஆளுநரின் கருத்துக்களுக்கு ஆதரவாக பதிவிட்டு வந்த காய்த்ரி ரகுராம், இப்போது திராவிடக் கட்சிகள், தமிழ் தேசியவாதிகளின் சிந்தனையோடு தன்னை தமிழ்நாட்டின் மகள் என பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in