வாக்களிக்க போறீங்களா?... அரசுப்பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்; சூப்பர் அறிவிப்பு!

வாக்குப்பதிவு - மாதிரி
வாக்குப்பதிவு - மாதிரி

தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், அனைவரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்தில் இலவச பயணம்
பேருந்தில் இலவச பயணம்

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்களுக்கு பொது போக்குவரத்தில் இலவச பயணச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாளை தேர்தலில் வாக்களிக்க சாதாரண அரசு நகர சேவை பேருந்துகளில் இலவச பயணச்சீட்டில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட கிராமம் அவர்கள் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இல்லாவிட்டால் மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்வதன் மூலம் வாக்களிக்க அழைத்து செல்வதற்கு வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும். அதன்படி அவர்கள் 1950 என்ற எண் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை அல்லது சக்சம் செயலி உள்ளிட்டவற்றின் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பொதுமக்கள் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்பட 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in