
திராவிடர் கழகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று தஞ்சையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.க சார்பில் மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி அரங்கில் விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தி.க தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார்.
இந்த விழாவில் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்ற பட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது. வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி வந்து, திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை செல்கிறார். இதனால் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் இன்று மாலை, மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்களையும், டெல்டா விவசாயிகளையும் அவர் சந்தித்து உரையாடுகிறார்.