துணைவேந்தர்கள் நியமனம்! ஆளுநரின் நிபந்தனையை நிராகரித்தது தமிழக அரசு!

தமிழக அரசு
தமிழக அரசு

3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் வைத்த நிபந்தனையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யு.ஜி.சி. பிரதிநிதியை (பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி) தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக துணைவேந்தர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில் தமிழக அரசு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க யு.ஜி.சி. விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. எனவே ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்றலாம்" என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in