பாஜகவில் கலை, கலாச்சாரப் பிரிவின் மாநில நிர்வாகிகள் நியமனம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு?

பாஜகவில் கலை, கலாச்சாரப் பிரிவின் மாநில நிர்வாகிகள் நியமனம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ராஜேஷ் கண்ணாவுக்கு பொன்னாடை போர்த்தும் சிவா...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகனின் ஒப்புதலின் பேரில் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப்பிரிவின் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி மேற்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ராஜேஷ் கண்ணா, தென் சென்னையைச் சேர்ந்த கண்மணி, சென்னையை சேர்ந்த கே.ஜி.பாண்டியன், தீனா ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநில தலைவர் ஃபெப்சி சிவா தெரிவித்துள்ளார்.

மாநில செயலாளர்களாக கோவையைச் சேர்ந்த கே.உமேஷ் பாபு, பாலசந்தர், தென் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், பாரதிராஜா, சுறா சுரேஷ், தரணி ராமகிருஷ்ணன், ஆனந்தர் சந்திரகாசன், மங்களம் அய்யர், சென்னையைச் சேர்ந்த பாபு கணேஷ், சாய்ராம், மோகன் வைத்தியா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சி.பி.ஜான் பிரிட்டோ, செங்கல்பட்டைச் சேர்ந்த பாலமுருகன், சிவகார்த்திகேயன், திருப்பூரைச் சேர்ந்த முருகன், திருச்சியைச் சேர்ந்த தனசேகர், கோவை தெற்கு பகுதியைச் சேர்ந்த வி.சந்திரன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனா நாச்சியார், தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ்.வினோத், மதுரையைச் சேர்ந்த திவ்யா ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in