தலைவர் இருப்பது இலங்கையில்; தலைவர்கள் மாற்றம் தமிழகத்தில்!

தலைவர் இருப்பது இலங்கையில்; தலைவர்கள் மாற்றம் தமிழகத்தில்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கையில் இருக்கும் நிலையில் தமிழக பாஜகவில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். பாஜக மாநில தலைமையால் வெளியிடப்பட்டுள்ள புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலில் 59 மாவட்டத் தலைவர்கள், 20 மாநில செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கு சாதகமாக செயல்படும் வகையில் மாநில நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் காரணமாக பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 8 மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக மட்டும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அண்ணாமலை நியமித்தார்.

அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே கட்சியின் அமைப்புரீதியான 60 மாவட்ட தலைவர்களில் சென்னை மேற்கு மாவட்டத்தைத் தவிர மீதமுள்ள 59 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக 20 பேரை நியமித்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்புகள் முதற்கட்டமாக வெளியாகி உள்ள நிலையில், அடுத்த கட்டமாக, சார்பு அணிகள், கட்சியின் முக்கிய பொறுப்புகளான பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பொறுப்புகளும் விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

எதிர்வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்திக்க ஏதுவாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியைப் பலப்படுத்தி ஆளும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது தமிழக பாஜக.

Related Stories

No stories found.