பதவி கொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

பதவி கொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

ஓபிஎஸ் அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுகவில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் கட்சியை இரண்டாக உடைத்துவிட்டனர். ஓபிஎஸ் ஒரு அணியாகவும், ஈபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருவதால் தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் இன்று புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், "அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ச.ராமச்சந்திரன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஓபிஎஸ் அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். "கட்சிக்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in